मुख्य सामग्री पर जाएँ
गीता मैत्री अंक ६जुलाई से दिसम्बर २०२३
१०Linguistic Kaleidoscope

பகவான் கிருஷ்ணன் அருளிய பகவத் கீதையில் (Trigunas) முக்குணங்களைப் பற்றி கூறியிருப்பதாவது:

असांखे हीउ मानुष जनम मिलियो आहे; जेसीं करण जोॻो न कंदासीं, ॼाणण जोॻो न ॼाणंदासीं ऐं हासिल करण जोॻो हासिल न कंदासीं, तेसीं ताईं डपु बिल्कुल खतम कोन थी सघंदो। जेतरो जेतरो भॻवान ते विश्वास रखबो, जेतरो जेतरो भॻवान ॾाहुं हलयो, ओतरो ई बेडपो थी सघबो। पाणेई मन में विचार ईंदो त मां परमात्मा जो अंश आहियां, इनकरे मुहिंजो कड॒हिं ब नास कोन थींदो त पोइ मां छो डिॼां? भॻवान सां लिंव लॻी वेई; उन सां नातो ॻंडजी वियो

त पोइ कुटुंब में ममता कोन रहंदी, एतिरे कदुर जो पहिंजे सरीर में ब ममता कोन रहंदी। ममता जे न हुअण सबब मरण जो डपु कोन रहंदो त ॿिए कहिं डप जो त सुवाल ई पैदा नथो थिए। यानी साधक बिल्कुल बेडपो थी वेंदो चइबो त अभय थी वेंदो मतलब त हुन में दैवी सम्पदा अभयम् अची वेंदी।

  • Seema Sahani, Udaipur

குணம் ஒரு மனிதனின் உடல், சமூகம், உளவியல் மற்றும் ஆன்மீக நிலையைக் குறிப்பதாகும். இயற்கை (Ptakriti)யின் இந்த குணங்கள் மூன்று வகைப்படும்.

சத்வ-சாத்வீகம்/ சமநிலை

ரஜோ- ராஜஸம்/ உணர்ச்சிமிக்க நிலை

தமஸ் - தாமஸம்/ மந்தநிலை.

இந்த மூன்று குணங்களின் வெளிப்பாடுகள் தனித்துவம் வாய்ந்தவை. மனிதனின் உணவு முறைகளும் இதனைச் சார்ந்து நமது ஆளுமையை மாற்றும்.

சத்வ குணம் பொதுவாக சிந்தனைத் திறனை வலுப்படுத்துவதாக இருக்கும். இவர்கள் சைவ உணவை உண்டு நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வார்கள். ரஜோ குணம் உணர்ச்சிகளால் உந்தப்படும். இவர்கள் உணர்ச்சியைத் தூண்டிவிடக் கூடிய கடின, காரமான உணவை உண்டு ஆக்ரோஷ நடத்தையை வெளிப்படுத்துவர். தமோ குணம் மந்த புத்தியை பிரதிபலிக்கும். இவர்கள் பழைய உணவை உண்டு பிற்போக்கான நடத்தை உள்ளவர்களாய் வாழ்வார்கள். எல்லா மனிதருள்ளும் இந்த மூன்று குணங்களும் உண்டு.

சத்துவ குணம் என்பது தூய்மையாகவும், ஒளிவிடும் தன்மையுடனும்

உயிரை உடலுடன் மகிழ்ச்சி– ஞானம் ஆகியவைகளால் இணைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். அந்த சத்துவ குணம் உயிரை மேம்படுத்தி, மறுபிறவி இல்லா முக்திக்கு வழிகோலும். இதனை தூயதாயிருக்கும் கண்ணாடியோடு ஒப்பிடலாம். கண்ணாடியின் வாயிலாக வெளிச்சம் நன்கு வெளியாகும்.சத்வ குணம் ஆத்ம பிரகாசத்தை விளக்குகிறது.

ரஜோ குணம் என்பது காமம் மற்றும் பற்று ஆகியவைகளால் உயிரை உடலுடனும், அவற்றின் செயல்கள் , பலன்கள் ஆகியவைகளால் இணைக்கும் தன்மை கொண்டது. அதன் காரணமாக மறுபிறவி எடுக்கும் தன்மை கொண்டதாக அமையும். விறகுக் கட்டை எரிகின்ற தீயை வளர்ப்பது போல ரஜோ குணம் வினைப் பற்றை வளர்க்கிறது.

தமோ குணவான்களின் நம்பிக்கை அஞ்ஞானத்தில் உருவானது.அவர்கள் செய்யும் தானமும் அகாலத்திலும், தவறான இடத்திலும், தவறானவர்களுக்கும் வெறுப்போடும், திட்டியும் பணிவில்லாமல் இருக்கும்.

அத்தியாயம் 14 – ல் 4-லிருந்து 23-வரை மூன்று குணங்களைப் பற்றிய விரிவான விளக்கங்கள் உள்ளன.

மேலும் அத்தியாயம் 18 – ல் 27 ஸ்லோகங்கள் முக்குணங்கள் பற்றியதாகும்.

சத்வம், ரஜஸையும், தமஸையும் அடக்கி மேலெழுகிறது. இதுபோல் ஒவ்வொரு குணமும் மற்ற இரண்டையும் அடக்குகிறது.

எந்த உயிர் இந்த மனித குணங்களை வெற்றி கொள்கிறதோ, அந்த உயிர் தான் பரப்பிரம்மமான இறைவனடி சேர்கின்றது. பிறகு அந்த உயிருக்கு மறு பிறவியோ, மூப்போ, இறப்போ இல்லை.

இந்த முக் குணங்கள் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை, உட்கொள்ளும் உணவு, வாழ்வில் எளிமை, செய்யும் தானம் ஆகியவைகளைப் பொறுத்தே அமையும்.

முக் குணத்தவர்கள் அனைவரின் நம்பிக்கையும் அவர்களது முற்பிறவியைப் பொறுத்தது.

  • Akila Jayaraman, Kolkata
मूल अंक के पृष्ठ देखें २ पृष्ठ
मूल अंक, पृष्ठ ५६मूल अंक, पृष्ठ ५७