मुख्य सामग्री पर जाएँ
गीता मैत्री अंक ७जनवरी से जून २०२४
१४Linguistic Kaleidoscope

என் வாழ்க்கையை மாற்றிய ஸ்ரீமத் பகவத் கீதா

என் வாழ்க்கையை மாற்றிய ஸ்ரீமத் பகவத் கீதா

நான் கடந்த 24 வருடங்களாக "ஸகஜ மார்க்கம் (HEARTFULNESS) என்னும் த்யான முறையை பின்பற்றி வருகிறேன் இது பதஞ்லிசயின் 'ராஜ யோகத்தின்" எளிதாக்கப் பட்ட முறை. இதன் தலைமை ஆஸ்ரமம் தெலுங்கானாவில் உள்ள ரங்கா ரெட்டி பகுதியில் கான்ஹா சாந்திவனம் என்பதாகும். கான்ஹா என்றால் அனைவரும் அறிந்ததே- சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணர் தான்.

கடந்த வருடம் அங்கு சென்றிருந்தபோது "கீதோபதேசம்" என்றுமொரு நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு கீதையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. மனதார ஸ்ரீ கிருஷ்ணரை எண்ணிப் பிரார்த்தித்தேன்.

பக்தனை ஒருபோதும் கைவிடாத பகவான் என்னுடைய பிரார்த்தனையைக் கேட்டு விட்டார் போலும்.

ஒருநாள் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்தது. ஓர் இணைப்பை அனுப்பி அதில் சேருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு அனுப்பியவர் யாரேன்று தெரியவில்லை.

பின்னர் தான் தெரிந்தது, அவர் எனக்கு அனுப்பவில்லை. வேறு ஒருவருக்கு அனுப்ப எண்ணி நம்பர் தவறாக பதிவு செய்துள்ளர். அதுதான் எனக்கு வந்தது. அதற்குள் நான் குரூப்பில் இணைந்து விட்டேன் கீதா என்னும் யாத்திரையில் ஆழ்ந்த பயணம் தொடங்கிவிட்டேன். அதன் பிறகு என்னுள் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தேன். முக்கியமாக, எதுவாக இருந்தாலும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம், மனதில் எப்போதும் ஒரு நிறைவை உணர ஆரம்பித்தேன், சில நேரங்களில் ஒரு இனம் புரியாத சந்தோஷம்,

ஆரோக்கியத்தில் B . P. யின் அளவு கூட நிதானமாவதை அறிந்தேன்.

சமீபத்தில் என் குடும்பத்தில் ஒரு முக்கிய நபரை [சகோதரர்] இழந்து தவித்த போது, கீதையின் நீதியுரை உதவியது.

"எல்லாம் காலத்தால் தீர்மானிக்கப்படுகிறது." அஹம் காலோஸ்மி" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணபகவான்.

ஆஸ்பத்திரியில் என் சகோதரருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பெயர் திரு. முரளி. செவிலியரின் பெயர் திரு. அருள்.

சகோதரர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டின் பெயர் "யசோதா" .

காரியங்கள் அனைத்தும் செய்த புரோகிதரின் பெயர் திரு.கிருஷ்ண மூர்த்தி.

இப்படி எல்லா விதத்திலும் கிருஷ்ணரின் வியாபகம் தெரிந்தது.

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த எனக்கு தவறுதலாக செய்தி அனுப்பிய நபர் திருமதி மீரா கண்ணன்.

வயது முதிர்ந்த என் தகப்பனார் தினமும் சொல்கிறார் - "என்னால் எப்படி நிதானமாக இருக்கமுடிகிறது" என்று.

ஒன்று புரிகிறது நிச்சயமாக கீதை உரைத்த திருஷ்ணரின் அருளும்,பலமும் தான் என்பதிலய் எந்த விதமான ஐயமுமில்லை.

  • ப்ருந்தா
मूल अंक के पृष्ठ देखें २ पृष्ठ
मूल अंक, पृष्ठ ११६मूल अंक, पृष्ठ ११७